மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆலோசனை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

News image
Updated On :16 ஜூன் 2022, 8:26 am

DIN

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' விவகாரம் வலுத்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து 'ஒற்றைத் தலைமை' விவகாரம் குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

இன்று எடப்பாடி கே. பழனிசாமி சேலம் சென்றுள்ள நிலையில் ஓபிஎஸ் தனது வீட்டில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

அதேநேரத்தில் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் குறித்து விவாதிக்க இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜெயக்குமார், செம்மலை, வைகைச் செல்வன், வளர்மதி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 11 பேர்  கொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 

இதன்பின்னர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்துள்ள ஓபிஎஸ், கட்சி  நிர்வாகிகளுடன் பொதுக்குழு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.