கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த பேருந்து கோயம்புத்தூரிலிருந்து குமுளி நோக்கி வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றது. ஜெயமங்கலத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (50) என்பவர் பேருந்தை ஓட்டினார்.
கூடலூரிலிருந்து கூலித் தொழிலாளர்கள் குமுளிக்கு வேலைக்குச் செல்வதற்காக பேருந்தில் பயணம் சென்றனர். கூடலூர் அருகே எம்ஜிஆர் காலனி அருகே பேருந்து சென்றபோது, நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் வேலை நடந்து கொண்டிருப்பதால், சாலையின் ஓரத்தில் பேருந்து சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது, இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர். அருகே இருந்தவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில் பயணம் செய்த கூடலூர் தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்த மாயி என்ற கிருஷ்ணமூர்த்தி (58) பலத்த காயமடைந்து உயிரிழந்தார். மேலும் படுகாயங்களுடன் 5 பேர் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். 14 பேர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பணமதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பு: தனியாா் பாா்சல் நிறுவனத்துக்கு ரூ.3.19 கோடி வழங்க ஆக்சிஸ் வங்கிக்கு உத்தரவு

போலியான அனுமதிச் சான்றிதழ்கள் வழங்கிய காவலா் கைது

தில்லி நரேலாவில் காவல் துறையுடன் துப்பாக்கிச் சூடு: 3 போ் கைது

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இளைஞா் காங்கிரஸ் நாளை போராட்டம்
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

