மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படமாட்டேன்: ஜெயக்குமார் பேட்டி

'ஒற்றைத் தலைமை' குறித்து பேசியதற்கு நடவடிக்கை என்றால், இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படமாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

News image
ஜெயக்குமார்(கோப்புப்படம்)
Updated On :18 ஜூன் 2022, 9:19 am

DIN

'ஒற்றைத் தலைமை' குறித்து பேசியதற்கு நடவடிக்கை என்றால், இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படமாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

வருகிற 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்த இறுதிக்கட்ட ஆலோசனை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 

'ஒற்றைத் தலைமை' குறித்த தொண்டர்களின் மனநிலையைத் தான் எடுத்துக் கூறினேன். கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதைத் தான் சொன்னேன். இதில் என்ன தவறு இருக்கிறது? இது வெளிப்படைத்தன்மையாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். 

கட்சி நடவடிக்கை எடுக்கும் என்ற பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படும் ஆள் ஜெயக்குமார் அல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, எனக்கு எவ்வளவோ பதவி கொடுத்து அழகு பார்த்தார்கள். எனக்கு பதவி வெறி இல்லை. அடிமட்டத் தொண்டனாக இருந்து கட்சிக்கு உழைப்பேன். 

ஒற்றைத் தலைமையா, இரட்டைத் தலைமையா என்பது குறித்து முடிவு செய்ய கட்சிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதை முடிவெடுக்கும் நபர் நான் அல்ல' என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.