இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட அரசு உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாக உலக அகதிகள் நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில்,
'ஐக்கிய நாடுகளின் பொது அவையில் 2000-ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஜூன் 20-ஆம் நாள் உலக அகதிகள் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்பதே தமிழர் வாழ்வியல் மரபு. உலகெங்கும் அகதிகளாக வாழ்பவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டிய நிலையில், தாய்த் தமிழ்நாட்டை நாடி வந்த இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட நமது அரசு உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
அகதிகள் முகாம் என்ற பெயரை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என மாற்றம் செய்து, அவர்களின் வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வாழ்வுரிமை - குடியுரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

16.3.1976: பல எக்சைஸ் வரிகள் குறைப்பு - சோப்பு, ரெடிமேட் துணி, பிளேடு மீது வரி வெட்டு

உலகளந்த பெருமாள் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் அன்னதானம்!

அரசியல் புரிதலே இல்லாதவா் விஜய்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா்!
விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

