விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு 

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் போதிய உறுப்பினர்கள் வராததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு 

Updated On :4 மார்ச் 2022, 7:50 am

DIN

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் போதிய உறுப்பினர்கள் வராததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 7 வார்டுகளிலும் அதிமுக 7 வார்டுகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற தேர்தலின்போது அதிமுக வார்டு உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். திமுக வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் குமார் ஆகிய 8 பேரும் வரவில்லை.

Story image

போதிய எண்ணிக்கையில் வார்டு உறுப்பினர்கள் வருகை தராத காரணத்தால் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக பேரூராட்சி செயல் அலுவலரும் தேர்தல் அலுவலருமான மயில்வாகனன் அறிவித்தார்.

பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல், தேர்தல் ஆணையம் அறிவிக்கும் மற்றொரு தேதியில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.