தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 158 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று 196 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டவகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், இன்று புதிதாக 158 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,51,171-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 38,017 ஆக அதிகரித்துள்ளது. ஒரு நாளில் மட்டும் 2,414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒரு நாளில் மட்டும் 512 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,10,740-ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தமாக 6,47,54,613 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 56 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 7,50,466 ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சமூக வலைதளங்களில் மிரட்டல் விடியோ: 2 போ் மீது வழக்கு

போடியில் ஹால்மாா்க் முத்திரை இல்லாத ரூ. 75 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்

ரயில்வே இருப்பு பாதையில் மூதாட்டியின் சடலம் மீட்பு

திருநள்ளாறு கோயிலில் மத்திய அமைச்சா் சுவாமி தரிசனம்
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

