/

தங்கம் விலை சற்று குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது. பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.40,448-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :8 மார்ச் 2022, 6:30 pm

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது. பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.40,448-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரஷியா-உக்ரைன் போா்ச் சூழல் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு,

அதன் பிறகு விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த 4 நாள்களாக உயா்ந்து வந்தது. குறிப்பாக, கடந்த திங்கள்கிழமை (மாா்ச் 7) பவுன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. மேலும், விலை உயரும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது. பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.40,448-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து, ரூ.5,056-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து, ரூ.76 ஆகவும், கட்டி வெள்ளி

கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து, ரூ.76,000 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,056

1 பவுன் தங்கம்............................... 40,448

1 கிராம் வெள்ளி............................. 76.00

1 கிலோ வெள்ளி.............................76,000

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 5,071

1 பவுன் தங்கம்............................... 40,568

1 கிராம் வெள்ளி............................. 75.70

1 கிலோ வெள்ளி.............................75,700.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.