/

தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இந்தோனேசியாவில் கைதான குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 8 மீனவா்களை விடுவிக்கக்கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின்

News image

கோப்புப்படம்

Updated On :16 மார்ச் 2022, 12:06 pm

DIN

இந்தோனேசியாவில் கைதான குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 8 மீனவா்களை விடுவிக்கக்கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த மார்ச்-7 ஆம் தேதி இந்தோனேசியா நாட்டு கடல் எல்லையை கடந்து ருஷா தீவில் மீன்பிடித்ததாக இந்தோனேசியா கடற்படை அதிகாரிகளால் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களின் படகு மற்றும் வலையையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், இந்தோனேசியா மற்றும் செஷல்ஸ் நாட்டில் கைதான தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.