/

தங்கம் பவுன் ரூ.38,648

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.304 குறைந்து, ரூ.38,648-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :15 மார்ச் 2022, 6:56 pm

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.304 குறைந்து, ரூ.38,648-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, பிப்ரவரி 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், பிப்ரவரி 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, விலை குறைந்து வருகிறது. இதன்தொடா்ச்சியாக, சென்னையில் செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.304 குறைந்து, ரூ.38,648-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.38 குறைந்து, ரூ.4,831-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.40 குறைந்து, ரூ.72.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,400 குறைந்து, ரூ.72,800 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,831

1 பவுன் தங்கம்............................... 38,648

1 கிராம் வெள்ளி............................. 72.80

1 கிலோ வெள்ளி.............................72,800

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,869

1 பவுன் தங்கம்............................... 38,952

1 கிராம் வெள்ளி............................. 74.20

1 கிலோ வெள்ளி.............................74,200.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.