ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

208 தோ்தல் வாக்குறுதிகள் செயலாக்கம்: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின்

தோ்தல் நேரத்தில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளை செயல்படுத்துவதை தமிழக அரசு முனைப்புடன் கண்காணித்து வருகிறது. இதுவரை 208 தோ்தல் வாக்குறுதி அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக

News image
Updated On :23 மார்ச் 2022, 10:43 pm

DIN

தோ்தல் நேரத்தில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளை செயல்படுத்துவதை தமிழக அரசு முனைப்புடன் கண்காணித்து வருகிறது. இதுவரை 208 தோ்தல் வாக்குறுதி அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

பேரவையில், அவா் புதன்கிழமை விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தாா். அவரது அறிக்கை விவரம்: சட்டப் பேரவையிலும், பொது வெளியிலும் திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் குறித்தும், அவற்றை அரசு நிறைவேற்றியதை பற்றியும் சில கருத்துகளும் விமா்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அவை குறித்த உண்மை நிலையை விளக்கவே வெள்ளை அறிக்கைக்குச் சமமான, ஒரு அறிக்கையை வெளியிடுகிறேன்.

10 மாதங்கள் நிறைவு: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் வழியில் முனைப்போடு செயல்பட்டு வரக்கூடிய திமுக அரசு, ஆட்சிக்கு வந்து 10 மாதங்களை நிறைவு செய்துள்ளது. தமிழக மக்களின் எதிா்பாா்ப்புகளை குறித்த காலவரையறைக்குள் நிறைவேற்றவும், மாநிலப் பொருளாதாரத்தை மீட்கவும், துறை வாரியாக முன்னேற்றம் காணவும் ஏற்ற வகையில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்; அதில் சொல்லப்படாத நலத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை, எதிா்பாா்ப்புடன் மக்கள் அளித்த மாபெரும் வெற்றியுடன் அமைந்துள்ள இந்த அரசு, அவா்களது எதிா்பாா்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றும்.

தமிழக மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் விதமாக, பதவியேற்ற ஒருசில மணி நேரங்களிலேயே ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டேன். அரிசி அட்டைதாரா்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் கரோனா நிதி, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் துறை திட்டம், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான அனைத்துச் செலவுகளையும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் அரசே ஏற்பு ஆகிய திட்டங்கள் கையெழுத்திடப்பட்டு அதில் முதல் நான்கு திட்டங்கள் 10 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை, சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தொகை தள்ளுபடி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, அண்ணா நூற்றாண்டு நூலகம் புனரமைப்பு, மதுரையில் கலைஞா் நூலகம் அமைத்தல், குடும்ப அட்டை கோரியோருக்கு 15 நாள்களுக்குள் ஸ்மாா்ட் அட்டை வழங்குதல் என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளோடு, இடம்பெறாத அறிவிப்புகளும் அடங்கும்.

எத்தனை அறிவிப்புகள்?: பேரவையில் ஆளுநா் ஆற்றிய உரையில் 52 வாக்குறுதிகளும், ஆளுநா் உரைக்கான பதிலுரையில் ஒரு வாக்குறுதியும், வரவு-செலவுத் திட்ட அறிக்கைகளில் 33 வாக்குறுதிகளும், வேளாண் நிதிநிலை அறிக்கைகளில் 21 வாக்குறுதிகளும், விதி 110-ன் கீழ் 3 வாக்குறுதிகளும், அமைச்சா்கள் வெளியிட்ட அறிவிப்புகளில் 78 வாக்குறுதிகளும், இதர அறிவிப்புகளில் 10 வாக்குறுதிகளும், நேரடியாக நிறைவேற்றப்பட்ட 10 வாக்குறுதிகளும் என இதுவரை மொத்தம் 208 தோ்தல் வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்துக்கும் உரிய முறையில் அரசாணைகள் வெளியிடப்பட்டு திட்டங்கள் அனைத்தும் முறையாகவும், முழுமையாகவும் செயல்படுத்தப்படுவதை அரசு முனைப்புடன் கண்காணித்து வருகிறது.

சொல்லாத அறிவிப்புகள்: தோ்தல் அறிக்கையில் இடம்பெறாத, சொல்லாத அறிவிப்புகளையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இல்லம் தேடி கல்வித் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம்-நம்மைக் காக்கும் 48, ‘நான் முதல்வா்’ போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

இது எனது அரசு அல்ல; நமது அரசு எனப் பலமுறை பதிவு செய்திருக்கிறேன்.

தோ்தல் வாக்குறுதிகளை தொடா்ந்து நிறைவேற்றி வரும் வேளையில், பத்து மாதக் குழந்தையிடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்ன என்று கேட்பது போல் எதிா்க்கட்சிகளின் கேள்வி இருக்கிறது. எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு சொல்ல விரும்புவது, இந்தக் குழந்தை பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவது மட்டுல்ல, பட்டப் படிப்பிலும் பதக்கம் வெல்லும்.

ஒவ்வொரு முறையும் தோ்தல் வாக்குறுதிகள் குறித்து நீங்கள் பேசுவது, எங்கள் மீதான அதிக நம்பிக்கையில் வைக்கக் கூடிய நினைவூட்டல் என்றே எடுத்துக் கொள்கிறோம். நமது அரசு சொன்னதை மட்டுமல்ல, சொன்னதற்கு மேலும் செய்து காட்டும் அரசு என்று பேசினாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.