சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கமல் கண்டனம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு  உருளை விலை உயர்வுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:46 am

DIN


பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஆண்டு நவ. 3-ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.5, டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடா்ந்து, நவ. 4-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அண்மையில் உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டது.

தோ்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட 2 வாரங்களாகியுள்ள நிலையில், அரசுக்குச் சொந்தமான எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை செவ்வாய்க்கிழமை லிட்டருக்கு 80 காசுகள் அதிகரித்தது.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக, பெட்ரோல், டீசல் விலையை முறையே லிட்டருக்கு 80 காசுகள் அதிகரித்துள்ளது எண்ணெய் நிறுவனங்கள். 

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.91 ஆகவும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.92.95 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில்,  
தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால் அது கீழே இறங்கியபோதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள். அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே... என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.