கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தாயை எரித்துக் கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனை

குடும்பத் தகராறில் தாயை எரித்துக் கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
தாயை எரித்துக் கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனை
Updated On :28 மார்ச் 2022, 8:14 am

DIN


புதுக்கோட்டை: குடும்பத் தகராறில் தாயை எரித்துக் கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே, மருதாள்மலையில் செலவுக்கு பணம் தராததால், தாய் லீலாவதி மீது மகன் சந்தோஷ் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில், லீலாவதி சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவத்தில் சந்தோஷ் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மகன் சந்தோஷுக்கு 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தாயை எரித்துக் கொன்ற குற்றவாளிக்கு எந்தச் சலுகையும் வழங்காமல், 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், தவறை உணர்ந்து திருந்த சந்தோஷை 3 மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கவும் நீதிபதி அப்துல் காதர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.