சமஸ்கிருதத்தில் உறுதிமொழி: காத்திருப்போர் பட்டியலில் மதுரை மருத்துவக் கல்லூரி டீன்

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரியின் டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சமஸ்கிருதத்தில் உறுதிமொழி: காத்திருப்போர் பட்டியலில் மதுரை மருத்துவக் கல்லூரி டீன்


மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரியின் டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி. மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், கல்லூரி முதல்வர் ரத்னவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உறுதிமொழி ஏற்பு நடைபெற்றபோதே அதனைப் படித்துக்கொண்டிருந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகரிடம் உறுதிமொழி ஏற்பு குறித்து சந்தேகத்தை எழுப்பினார். 

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர், புதிய உறுதிமொழி ஏற்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது, மருத்துவர்கள் இப்போகிரடிக் சத்தியப்பிரமாணத்தை மட்டுமே செய்யும் நிலையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட 'சமஸ்கிருத உறுதிமொழியான 'மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி ஏன் ஏற்கப்பட்டது என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அந்த உறுதிமொழியின் ஒரு வரியில், குறிப்பாக ஒரு ஆண் மருத்துவராக ஒரு பெண் நோயாளிக்கு அவளது கணவர் அல்லது பிற நெருங்கிய உறவினர் இல்லாமல் சிகிச்சை அளிக்க மாட்டேன் என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றன. இந்த வாசகங்கள் பிற்போக்குத்தனமானது எனவும், மருத்துவ நடைமுறைகளுக்கு எதிராக உள்ளது எனவும் பல்வேறு மருத்துவர்களும் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விளக்கமளித்துள்ள மருத்துவக் கல்லூரி நிர்வாகம், "உறுதிமொழி ஏற்பு குறித்து மாணவர் செயலாளர் ஒருவர் இது போன்று உறுதிமொழியை எடுத்து வாசித்துள்ளார். இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தது.

இதையடுத்து, இந்த விவகாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் பூதாகரமானது. இந்த நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்னவேலை பதவியிலிருந்து விடுவித்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இதுதொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டது மட்டுமில்லாமல், இப்போகிரேடிக் உறுதிமொழியையே பின்பற்றுமாறும் மருத்துவக் கல்லூரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com