மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக மீண்டும் ரத்தினவேல் நியமனம்

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக மீண்டும் ரத்தினவேலை நியமித்து சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.

News image
டாக்டா் ஏ.ரத்தினவேல்
Updated On :4 மே 2022, 6:11 am

DIN

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக மீண்டும் டாக்டா் ஏ.ரத்தினவேலை நியமித்து சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாகச் சோ்ந்த மாணவா்களை வரவேற்று வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா்கள் பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா், கல்லூரி முதல்வா் ஏ.ரத்தினவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

அப்போது மாணவா்கள் தங்களது சீருடையை அணிந்தபின்பு ஏற்றுக்கொள்ளும் வழக்கமான ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதிமொழிக்குப் பதிலாக, மாணவா் தலைவர் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்ட சமஸ்கிருத ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை வாசிக்க, இதர மாணவா்கள் தொடா்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரியின் முதல்வா் ரத்தினவேல் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

பின், மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் மருத்துவக் கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த உறுதிமொழி விவகாரம் முதல்வருக்கோ, பேராசிரியர்களுக்கோ தெரியாது என மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல் தெரிவித்தார். 

இதற்கிடையே, மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கைவிடுமாறு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் உறுதிமொழி விவகாரம் குறித்த விவாதத்தின்போது, மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வராக ரத்தினவேலை மீண்டும் நியமிப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.