2 பாஜக எம்எல்ஏக்களை தூக்குவோம்: திமுக எம்.பி. செந்தில்குமார்
திமுக எம்.பி.திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், 2 பாஜக எம்எல்ஏக்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக அக்கட்சியின் எம்.பி.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


திமுக எம்.பி.திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், 2 பாஜக எம்எல்ஏக்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக அக்கட்சியின் எம்.பி.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு அளித்து, நேர்காணலில் பங்கேற்றார். ஆனால் சூர்யாவுக்கு திமுக தலைமை சீட் கொடுக்கவில்லை. இதனால் சூர்யா திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந்நிலையில், சூர்யா நேற்று திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதுகுறித்து திமுக எம்.பி. செந்தில்குமார் தனது ட்விட்டர் பதிவில், திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக உங்களுக்கு ஒரு தகவல்.
உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் துக்கிவிடுவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "முடிந்தால் தூக்குங்கள்…பார்க்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...