❖ திறன் படைத்த மனிதவளத்தை உருவாக்கும் நோக்கத்தோடு, ரூபாய் 2 ஆயிரத்து 877 கோடி செலவில் முன்னணி தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் 71 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் - “தொழில் 4.0” தர நிலையை அடைவதற்கு ஒரு சிறப்புத் திட்டமாகச் செயல்படுத்தப்படும்.
❖ மாநிலத்திலிருந்து ஏற்றுமதியை மேலும் மேம்படுத்த, அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில், மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
❖ தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளித்திட, தூத்துக்குடியில், ஏற்றுமதியை மையமாகக் கொண்ட “சர்வதேச அறைகலன் பூங்காவிற்கு” 07.03.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
❖ ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்துவம் வாய்ந்த பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை உலக அளவில் சந்தைப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் “மாவட்ட ஏற்றுமதி மையங்கள்” உருவாக்கப்பட்டு வருகிறது.
❖ “குறு, சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கையேடு வெளியிடப்பட்டிருக்கிறது.
* இந்தக் கையேட்டின் தொடர்ச்சியாக ஒவ்வொரு துறை சார்ந்த ஏற்றுமதிக்கான வழிகாட்டி கையேடு உருவாக்கிட ஃபியோ அமைப்பு உதவ வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
❖ தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புத்தொழில் வளர்ச்சிக்கு வழிகோலும் வகையில் ஈரோடு, மதுரை, திருநெல்வேலியில் புதிய மண்டல அளவிலான புத்தொழில் மையங்கள் ஏற்படுத்த டான்சிம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
❖ சென்னை நந்தம்பாக்கத்தில் ரூபாய் 75 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாநில புத்தொழில் நிறுவன மையம் ஒன்று தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலமாக அமைக்கப்படும்.
❖ ஏற்றுமதியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஏறத்தாழ 50 விழுக்காடு பங்களிக்கின்றன. இந்நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக, இத்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட, 49 விழுக்காடு அதிகரிக்கப்பட்டு, ரூபாய் 911 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.