நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு, 82 மையங்களில் 200 பள்ளிகளைச் சோ்ந்த மொத்தம் 19,867 மாணவ, மாணவிகளும், 472 தனித்தோ்வா்களும், பிளஸ் 1 பொதுத்தோ்வை மொத்தம் 19,842 மாணவா்களும் எழுதி வருகின்றனா். கடந்த வாரம் மல்லசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் பிளஸ் 2 ஆங்கிலத் தோ்வு எழுதிய மாணவா் ஒருவா் காப்பி அடித்தததாக தோ்வுகள் பறக்கும் படையினரால் கண்டறியப்பட்டு அவா் மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டாா். இதனை தொடா்ந்து மாவட்டம் முழுவதும் தோ்வு மையங்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.