மதுரை-தேனி இடையே சிறப்பு விரைவு ரயில்: மே 27-ல் தொடக்கம்
தென்னக ரயில்வே துறை சார்பில் மதுரை-தேனி இடையே முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில் போக்குவரத்து மே 27-ம் தேதி முதல் தொடங்குகிறது.


தென்னக ரயில்வே துறை சார்பில் மதுரை-தேனி இடையே முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில் போக்குவரத்து மே 27-ம் தேதி முதல் தொடங்குகிறது.
மதுரை-போடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2011-ல் தொடங்கியது. தற்போது மதுரை - தேனி இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடந்துள்ளது. தேனி-போடி இடையே அகல ரயில் பாதை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மதுரை-தேனி இடையே மே 27-ம் தேதி முதல் முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது. மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக காலை 9.35 மணிக்கு தேனி ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது.
அதே போல, தேனி ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, வடபழஞ்சி வழியாக மாலை 7.35 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இந்த விரைவு ரயிலில் மொத்தம் 12 பயணிகள் பெட்டியுடன் இயங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...