47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிலம்பம்: நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோடு மாணவிகள்

சிலம்பம், நுன்ஜாக்கினை 1.20 மணி நேரம் இடைவிடாமல் சுழற்றி நோபால் உலக சாதனை புத்தகத்தில் ஈரோட்டைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

News image
சிலம்பம்: நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோடு மாணவிகள்
Updated On :23 மே 2022, 11:55 am

DIN

ஈரோடு: சிலம்பம், நுன்ஜாக்கினை 1.20 மணி நேரம் இடைவிடாமல் சுழற்றி நோபால் உலக சாதனை புத்தகத்தில் ஈரோட்டைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் புத்தாஸ் சிலம்பாட்ட டிரஸ்ட் மற்றும் இணைந்து ஈரோட்டில் நேற்று நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தியது. இதில், 10 வயது பிரிவில் திக்‌ஷா சக்தியும், 7வயது பிரிவில் சிவிக்‌ஷா சக்தி ஆகியோர் பங்கேற்று ஒற்றைகம்பு சிலம்பமும், நுன்ஜாக்கும் இடைவிடாது சுழற்றினர். மாணவி சிவிக்‌ஷா சக்தி, 1 மணி நேரம் 5 நிமிடம் 6 விநாடியும்(1.05.06) திக்‌ஷா சக்தி 1 மணி நேரம் 20 நிமிடம் 3 விநாடியும்(1.20.03) சுழற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று சாதனைப்படைத்தனர். 
இதைத்தொடர்ந்து நோபால் உலக சாதனையின் முதன்மை அலுவலர், மாநில நடுவர் துரைராஜ் ஆகியோர் மாணவிகளை பாராட்டி நோபல் உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழும், பதக்கமும் வழங்கினர். 

இந்நிகழ்ச்சிக்கு, சிலம்பாட்ட கழக தலைவர் யூ.ஆர்.சி.தேவராஜ் தலைமை தாங்கினார். அக்னி ஸ்டீல் இயக்குநர்கள் சின்னச்சாமி, தங்கவேல், ராஜாமணி சின்னச்சாமி, மாணவிகளின் பெற்றோர் சக்தி கணேஷ், தீபா, கிரின் பில்ட் இயக்குநர் பாலு, பிரியா, டிப்ஸ் பள்ளி இயக்குநர் சிவகுமார் வி.வி நேஷனல் இயக்குநர் செந்தில் முருகன், மற்றும் ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளரும், மாணவிகளின் பயிற்சியாளருமான கந்தவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.