தமிழகத்தில் திமுக ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல என்று சேலத்தில் நடைபெற்ற ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது ஆன்மிகத்திற்கு எதிராக எழுந்த சர்ச்சை குறித்து பேசிய அவர், திமுக ஆட்சி ஒருபோதும் ஆன்மிகத்திற்கு எதிரான கட்சியாக இருந்ததில்லை. இருக்கப்போவதுமில்லை.
ஆன்மிகத்தின் பெயரால் திமுக ஆட்சி மீது சிலர் குறை சொல்லத் தொடங்கியுள்ளனர். குறை சொல்வதற்கு ஏதும் இல்லாததால், ஆன்மிகத்தின் பெயரால் ஆட்சி மீது அவதூறு சொல்கிறார்கள்
திராவிட மாடல் எதையும் இடிக்காது, உருவாக்கும். யாரையும் புறக்கணிக்காது, அரவணைக்கும்.
திமுக கொடுத்த வாக்குகளை மக்கள் மறந்தாலும், நான் மறக்கமாட்டேன். தமிழக மக்களுக்காக என் சக்தியையும் மீறி உழைப்பேன் என மக்கள் மத்தியில் உறுதி அளிக்கிறேன்.
பெட்ரோல், டீசல் விலையை பல மடங்கு உயர்த்திவிட்டு தற்போது கந்துடைப்புக்காக சிறிதளவு குறைத்துள்ளனர்.
இல்லாததை கட்டவிழ்த்துவிட்டு பார்க்கும் பலரால் இருப்பதை கண் திறந்து பார்க்க முடியவில்லை.
எத்தனை விஷத்தன்மை வாய்ந்த பிரசாரங்களை செய்தாலும் திமுகவை ஒருபோதும் மக்கள் மனதிலிருந்து வீழ்த்த முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தாக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்!

'வரலாறு படைக்கும் தமிழ்ப் பெண்கள்' - முதல்வரின் மகளிர் தின வாழ்த்து!

வருண் சக்கரவர்த்தி செய்ய வேண்டியது என்ன? பியூஸ் சாவ்லா அறிவுரை!

அம்பேத்கர் சிலையைத் திறந்துவைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

