/

அண்ணா பல்கலை.யில் கரோனா பாதிப்பு 11ஆக உயர்வு

சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

News image
அண்ணா பல்கலை.
Updated On :6 பிப்ரவரி 2024, 12:46 pm

DIN

சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக, சென்னை ஐ.ஐ.டி.யில் 198 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் கரோனா தொற்று பரவியுள்ளது. 

இன்று மேலும் 2 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் இதுவரை 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 160 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.