குற்றங்கள் எந்த சூழ்நிலையிலும் உருவாகாத நிலையை காவல்துறை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை, மக்களின் காவலர்களாக இருந்து சிறந்து விளங்குவோரை பாராட்டுகிறேன். காவல்துறை நம் நண்பன் என மக்கள் சொல்லும் அளவிற்கு செயல்பட வேண்டும். தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக் கூடாது.
திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயல்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மக்களுக்கு அச்சம் தரும் சம்பவங்கள் நிகழாமல் காவல்துறை பார்த்துக்கொள்ள வேண்டும். குற்றங்கள் எந்த சூழ்நிலையிலும் உருவாகாத நிலையை காவல்துறை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், மற்றொரு கை காவல்துறை.
காவல்துறை மக்களுடன் நெருக்கமாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும். எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக திராவிட மாடல் ஆட்சியை தமிழகத்தில் வழங்கி வருகிறோம். அமைதியான சூழ்நிலையில்தான் தொழில் வளர்ச்சி ஏற்படும். தமிழகம் அமைதி பூங்காவா இருப்பதால்தான் தொழில்துறையினர் வருகின்றனர். போதைப் பொருள்கள் நடமாட்டம் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தான் சரக்கு விமானம் அரபிக்கடலில் விபத்து!

இன்றைய ராசி பலன்கள் (09.7.2026) 12 ராசிகளுக்கும்! இன்று வெற்றி யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 09) - அதிர்ஷ்டம் காத்திருக்கு விருச்சிக ராசிக்கு!
ரோஹிணியில் பாதுகாவலரிடம் கொள்ளையடித்த 4 சிறுவா்கள் பிடிபட்டனா்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



