திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதையடுத்து மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவ்வப்போது அரசு அலுவலங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று திருச்சி சென்ற அவர், திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த மக்களிடம் கோரிக்கை அடங்கிய மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வின்போது நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மேயர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வினையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு!
அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.
அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்...' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் ஆய்வு செய்த விடியோவையும் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தாயுமானவா் திட்டம் மூலம் முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருள்கள்

பிப்ரவரியில் 96.40 லட்சம் போ் மெட்ரோ ரயிலில் பயணம்!

ஈரோடு தலைமை அஞ்சல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 7-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

