அக்னிபத் ராணுவ வீரர்கள்: நவ. 15 முதல் வேலூரில் ஆள்சேர்ப்பு முகாம்

அக்னிபத் திட்டத்தின் கீழ் வேலூரில் வருகின்ற நவம்பர் 15 முதல் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அக்னிபத் திட்டத்தின் கீழ் வேலூரில் வருகின்ற நவம்பர் 15 முதல் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

“ராணுவத்தில் கீழ்காணும் பணிகளுக்கு நபர்களை சேர்ப்பதற்கான முகாம் நவம்பர் 15 முதல் 29 வரை வேலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.

i.     அக்னி வீரர் (ஆண்)

ii.    அக்னி வீரர் (பெண் ராணுவ காவலர்)

iii. சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர் / கால்நடை செவிலியர் உதவியாளர்

iv.    இளநிலை சேவை அதிகாரி

தமிழகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து ஏற்கெனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்ட முகாம் பற்றிய அறிவிக்கையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் முகாமிற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும். ஆவணங்களை எடுத்து வருவதற்கான அமைப்பு முறையும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான ஆவணங்கள் இல்லாமல் மற்றும் அவற்றை தவறான முறையில் (குறிப்பாக உறுதிமொழி பத்திரம்)  எடுத்து வரும் விண்ணப்பதாரர், முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்.

முழுவதும் தானியங்கி முறையில், நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மை வாயிலாகவும் பணிசேர்ப்பு நடைபெறும். இதனால் பொய்யான வாக்குறுதிகளைத் தந்து ஏமாற்றும் நபர்களிடமிருந்து விலகி இருக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடின உழைப்பும், தயார்முறை மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்யும்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com