பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது.
24 ஆண்டுகளாக 2-வது விமான நிலையம் குறித்து பேசப்பட்டாலும் தற்போதுதான் அதற்கான அமைவிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
தொழில் நுட்ப ரீதியில் விமான நிலையில் அமைய சாத்தியமான இடங்களில் ஒன்றாக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எதிர்கால மக்கள் தொகை பெருக்கம், தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. விமான நிலையம் அமைக்க முதலீடு செய்யும் ரூ.100-க்கு, வருமானமாக ரூ.325 தமிழகத்திற்கு வருமானமாகக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணையதள முகவரி மாற்றம்
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைவதை முன்னிட்டு அதுவரை சென்னை மெட்ரோ வழித்தடம் விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிக்கையில் கூறியுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!

மாட் ரென்ஷா, டிம் டேவிட் அதிரடி: வங்கதேசத்துக்கு 197 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



