சொத்துக்குவிப்பு வழக்கில் வேலூர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி இன்று ஆஜரானார்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்குதொடர்பாக தன் மனைவி விசாலட்சுமியுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆஜரானார்.
பொன்முடி மற்றும் அவர் மனைவி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது அமைச்சரானதால் இந்த வழக்கு வேலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி. தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து அமைச்சரும் அவரது மனைவியும் புறப்பட்டுச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நைஜீரியாவில் தொடரும் அவலம்! ஒரே நாளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல்!

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

ஹார்திக் பாண்டியா ஒரு கிளட்ச்..! இம்பாக்ட் வீரர் விருது விடியோ!

Whistle Podu Please! CSK அணியின் ரசிகர் பேருந்து அறிமுகம்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

