பாஜகவை எதிர்த்து தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மணப்பாறையில் நவம்பர் புரட்சி தின கொடி ஏற்றி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தேசியக் குழு உறுப்பினரும் தாமரை இலக்கிய இதழின் ஆசிரியருமான சி.மகேந்திரன் பாஜகவை எதிர்த்து தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பேட்டியளித்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தின கொடி ஏற்றி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைச் செயலாளர் த.இந்திரஜித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் முன்னாள் தேசியக் குழு உறுப்பினரும் தாமரை இலக்கிய இதழின் ஆசிரியருமான சி.மகேந்திரன் பங்கேற்றார்.
கொடியேற்றம் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மகேந்திரன், 'பால் விலை உயர்வு, சொத்தின் மீதான வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, இது மூன்றும் உண்மையிலேயே தமிழ்நாடு மக்கள் மீது சுமர்த்தியுள்ள பெரிய சுமையாகத்தான் இருக்கிறது. இந்த சுமையினை இறக்க தமிழ்நாடு அரசு சில முயற்சிகளை எடுத்தாக வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறான சுமை ஏறுவதற்கு முக்கியக் காரணம் மத்தியில் இருக்கக்கூடிய மோடி அரசு என்பதை பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகின்றேன். ஒருவிதத்தில் பார்த்தால் தமிழக மக்களுக்கும் தமிழக அரசிற்கும் எதிராக பாரதிய ஜனதா கட்சி சதி செய்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் மத்திய, மாநில அரசுகள் ஆராய்ந்து வருகின்றன. அந்த நிறுவனங்களுக்கு தெரியாத விபரங்களையெல்லாம் இவர்கள் சொல்கிறார்கள், ஜனநாயகத்தில் கேள்விகள் கேட்கலாம், ஆனால் ரகசியங்கள் எங்களுக்கு தெரியும் என சொல்கிறார்கள். அவர்களுக்கு எப்படி தெரியும்? இதெல்லாம் தமிழ்நாட்டின் அரசியலை சீர்குலைப்பதற்கான சதி. சதிவலையை விரித்திருக்கக்கூடிய பாஜகவை எதிர்த்து தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தினம் தினம் திருநாளே: தினப்பலன்கள்!
தோல்விக்கும் தோள் கொடுப்போம்!

திண்ணிய நெஞ்சம் வேண்டும்!

தோல்விக்கும் தோள் கொடுப்போம்!
வீடியோக்கள்

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

