/

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவருக்கு கூடுதல் நிதியுதவி: திருமாவளவன் கோரிக்கை

இந்தியக் கடற்படை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவருக்கு கூடுதல் நிதியுதவி அரசு வழங்கிட வேண்டும் என தொல். திருமாவளவன் கூறியுள்ளார். 

News image
Updated On :7 நவம்பர் 2022, 7:02 am

DIN

இந்தியக் கடற்படை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவருக்கு கூடுதல் நிதியுதவி அரசு வழங்கிட வேண்டும் என தொல். திருமாவளவன் கூறியுள்ளார். 

மதுரை அரசு மருத்துவமனையில் இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவர் வீரவேலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல் திருமாவளவன், இந்திய கடற்படையால் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவர், கடந்த 17 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை நன்கு தேறியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்ப உள்ளார். ஓராண்டுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் அவர் உள்ளார். எனவே, தமிழக அரசு வழங்கிய நிதி உதவி போதாது, கூடுதலாக பொருள், நிதி உதவி வழங்க வேண்டும் என்று கூறினார். 

மேலும், பாஜக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ள ஓர் இயக்கம். ஆனால், ஆர்.எஸ்.எஸ். திரைமறைவில் செயல்படக்கூடிய இயக்கம் என்பதாலேயே அதனை நாங்கள் எதிர்க்கிறோம்' என்றும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.