தொடர்ந்து 29-வது நாளாக 120 அடியாக நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 29 ஆவது நாளாக புதன்கிழமை காலை 120 அடியாக நீடிக்கிறது.


மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 29 ஆவது நாளாக புதன்கிழமை காலை 120 அடியாக நீடிக்கிறது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் லேசான மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 13,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | 10% இடஒதுக்கீடு விவகாரம்: நவ. 12-இல் பேரவை கட்சித் தலைவா்கள் கூட்டம்
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 13,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...