வேதாரண்யம் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி: ரூ.15 கோடி மதிப்பு நகை, பணம் தப்பியது!

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே எரிவாயு உருளையை பயன்படுத்தி வங்கியின் கதவுகளைத் துண்டித்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
வேதாரண்யம் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி: ரூ.15 கோடி மதிப்பு நகை, பணம் தப்பியது!

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே எரிவாயு உருளையை பயன்படுத்தி வங்கியின் கதவுகளைத் துண்டித்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சநதிக்குளம் கிழக்கு பகுதியில் மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. வங்கிக் கட்டடத்தின் ஜன்னல் கம்பிகளை எரிவாயு  உருளை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையர்கள்  உள்ளே சென்றுள்ளனர். பெட்டகம் இருந்த பகுதிக்கு செல்லும் கதவை திறக்க முயன்ற நிலையில், எரிவாயு தீர்ந்துள்ளது.

அப்போது, அங்கு வந்த காவலாளி முத்துக் கண்ணுவை கம்பியால் தாக்கிவிட்டு கொள்ளையன் தப்பியுள்ளான்.

கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் விவசாயிகளால் கடன் பெற்ற 1,740 பாக்கெட்டுகளில் இருந்த ரூ.15 கோடி மதிப்பு நகை, ரூ.16 லட்சம் ரொக்கம் தப்பியது.

வங்கிக்கு வெளியே காத்திருந்த வாடிக்கையாளர், விவசாயிகளிடம் வங்கியின் தலைவர் சோமசுந்தரம் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com