தமிழகமெங்கும் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்!

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து கொண்டனர்.
சேலம் குரங்கு சாவடி பகுதியில் உள்ள சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சபரிமலைக்கு மாலை அணிந்து கொள்ளும் பக்தர்கள்
சேலம் குரங்கு சாவடி பகுதியில் உள்ள சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சபரிமலைக்கு மாலை அணிந்து கொள்ளும் பக்தர்கள்
Published on
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து கொண்டனர்.

கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை திறந்திருக்கும். இந்த நாள்களில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

சேலம் குரங்கு சாவடி சாஸ்தா ஐயப்பன் கோயில் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
சேலம் குரங்கு சாவடி சாஸ்தா ஐயப்பன் கோயில் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
சேலம் குரங்கு சாவடி சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளையொட்டி கோயிலில் ஏற்றப்பட்டுள்ள 18 படிக்கட்டில் அகல்விளக்கு
சேலம் குரங்கு சாவடி சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளையொட்டி கோயிலில் ஏற்றப்பட்டுள்ள 18 படிக்கட்டில் அகல்விளக்கு

சபரிமலை செல்லும் பக்தர்கள் பெரும்பாலானோர் கார்த்திகை 1ஆம் தேதி மாலை அணிந்து கொள்வார்கள்.

சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் திரண்ட பக்தர்கள்
சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் திரண்ட பக்தர்கள்

அதன்படி, தமிகமெங்கும் உள்ள ஐயப்பன், விநாயகர் கோயில்களில் கார்த்திகை முதல் நாளான இன்று அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

இந்தாண்டு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் வழக்கத்தைவிட 3 மடங்கு அதிகமானோர் மாலை அணிந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com