தமிழகத்தில் ஆளுநர் பதவியே காலாவதியான பதவிதான் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு கடந்த செப்டம்பர் 26-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு அக்டோபர் 1 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
தொடர்ந்து கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி நடந்த பேரவையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து விளக்கம் கேட்டு ஆளுநர் கோரியிருந்த நிலையில் தமிழக அரசு அதுகுறித்து விளக்கம் அளித்தது. எனினும் இந்த மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் காலாவதியாகிவிட்டது.
இதுகுறித்து தமிழக அமைச்சர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யான கனிமொழி, 'ஆளுநர் பதவியே காலாவதியான பதவிதான் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். அந்த பதவி இல்லையென்றால் இன்று ஆன்லைன் ரம்மியை ஒழித்திருக்க முடியும். எதை முதலில் செய்ய வேண்டும் என அவருக்குத் தெரிய வேண்டும். ஆளுநர் பதவியே தேவையில்லாத ஒன்று. ஆளுநர் பதவி இல்லாவிட்டாலே இன்று பல சிக்கல்கல் தீர்ந்துவிடும். ஆன்லைன் ரம்மியைப் பாதுகாக்க எதற்காக இவ்வளவு துடிக்கிறார்கள் என்று தெரியவில்லை' என்றார்.
சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஒண்ணுமே புரியல! குஜராத்தில் ஒரேமாதிரி வாக்குறுதிகளை அளித்த கட்சிகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் அதிமுக- அன்பழகன் உறுதி

எம்எல்ஏ விடுதி பராமரிப்புப் பணி ஒப்பந்தப்புள்ளி: நடவடிக்கைகளைத் தொடர உயா்நீதிமன்றம் அனுமதி

விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

‘முத்தமிழறிஞா் கலைஞா் அரங்கம்’: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

