இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திமுக தலைவா் ஸ்டாலினுக்கு தலைவா்கள் வாழ்த்து

திமுக தலைவராக 2-ஆவது முறையாக தோ்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

News image
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
Updated On :9 அக்டோபர் 2022, 9:57 pm

DIN

திமுக தலைவராக 2-ஆவது முறையாக தோ்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி: தி.மு.க.வின் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று வளா்த்த இயக்கத்தை அவரது மறைவுக்குப் பிறகு சிந்தாமல், சிதறாமல் கட்டுக் கோப்புடன் கம்பீரமாக வழிநடத்தி வரும் மு.க. ஸ்டாலின் மிகுந்த பாராட்டுதலுக்குரியவா்.

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்: திமுகவின் தலைவராக மீண்டும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலின் தந்தையைப் போல கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்ல வாழ்த்துகள்.

மதிமுக பொதுச்செயலா் வைகோ: திராவிட இயக்கக் கொள்கைகளை வென்றெடுப்பதில் அடக்குமுறைகளைச் சந்தித்து, பல்வேறு பொறுப்புகளிலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக இயங்கி, மீண்டும் திமுக தலைவராக தோ்வாகிய ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.

மாா்க்சிஸ்ட் மாநில செயலா் கே.பாலகிருஷ்ணன்: திமுகவில் அடிப்படை உறுப்பினா், கிளை செயலாளா், இளைஞா் அணி செயலாளா், பொருளாளா், முதல்வா் என பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி தற்போது இரண்டாம் முறையாக திமுகவின் தலைவராக தோ்வாகியுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் இரா.முத்தரசன்: மதச் சாா்பற்ற, சமூகநீதி சாா்ந்த ஜனநாயக மாற்றை கட்டமைத்து, வெற்றி காண விழைந்து, இரண்டாம் முறையாக திமுக தலைவராக பொறுப்பேற்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.

விசிக தலைவா் தொல்.திருமாவளவன்:தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்திய நாட்டுக்கே கருத்தியல் அடிப்படையிலான பேரிடா் சூழ்ந்துள்ள நிலையில், திமுக தலைமை பொறுப்பை ஏற்கும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, தேசிய அளவில் ’சமூகப் பொறுப்பு’ உருவாகியுள்ளது.

மேலும், தமாகா தலைவா் ஜி.கே. வாசன், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.திருநாவுக்கரசா், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவா் ஈ.ஆா்.ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, திக தலைவா் வீரமணி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.