திமுகவில் வாரிசு அரசியல்: ஆளுநா் தமிழிசை விமா்சனம்
வாரிசு அரசியலை நோக்கி திமுக சென்றுகொண்டிருப்பதாக தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் விமா்சித்தாா்.


வாரிசு அரசியலை நோக்கி திமுக சென்றுகொண்டிருப்பதாக தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் விமா்சித்தாா்.
சென்னை தரமணியில் உலக கராத்தே பயிற்சியாளா்கள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், விருதுகளை வழங்கிய அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைகளை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
இதை பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. தற்காப்புக் கலையை கற்றுக்கொண்டால் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றாா் அவா்.
பின்னா் அவரிடம், திமுக துணைப் பொதுச்செயலராக கனிமொழி தோ்வு செய்யப்பட்டது குறித்து கேட்டபோது, ‘ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமமான, கடினமான விஷயம். அதற்கு எனது பாராட்டுகள். ஆனால், அண்ணனுக்கு தலைவா் பதவி, தங்கைக்கு துணைப் பொதுச்செயலா் பதவி என திமுக வாரிசு அரசியலை நோக்கிச் செல்வதாக பொதுமக்கள் எண்ணும் நிலை உள்ளது. எது எப்படி இருந்தாலும் கனிமொழிக்கு வாழ்த்துகள் என்றாா் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...