900 கன அடியாக உயர்ந்து வெளியேறும் உபரிநீர் வெளியேறி வருவதால், குடியாத்தம் கௌண்டன்யா ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக - ஆந்திரா எல்லையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக குடியாத்தம் அடுத்துள்ள மோர்தானா தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டி அணை முழுவதுமாக நிரம்பியது. மேலும் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நேற்று காலை 250 கன அடி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்ந்து இரவு 900 கன அடி நீர் மோர்தானா அணையில் இருந்து வெளியேறி வருகிறது.
உபரிநீர் வரும் கௌண்டன்யா ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஜிட்டப்பள்ளி, சேம்பள்ளி, அக்ரஹாரம், ரங்கசமுத்திரம், பெரும்பாடி மற்றும் குடியாத்தம் நகரத்தில் ஆற்றுக் கரையோரம் உள்ள பகுதிகளில் ஆற்றின் இரு கரைகளில் வசிக்கும் மக்கள் தாழ்வான பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை
மேலும் குடியாத்தம் காவல் துறையினர் கௌண்டன்யா ஆற்றங்கரை ஓரம் உள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சங்ககிரியில் சித்திரை தோ்த் திருவிழா நிறைவு: மலைக்கு திரும்பினாா் சுவாமி

வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

இந்திய யு20 தடகள அணியில் சாதனா ரவி!
வங்கதேசம் 179 ரன்கள் முன்னிலை!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

