அக்மார்க் தரம்பெற்ற ஆவின் நெய்யினால் சுகாதாரமான முறையில் இனிப்புகள் தயாரிக்கப்படுகிறது என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளிதழ் ஒன்றில் வெளியான கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், ஆவின் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஆவின் நிறுவனம் தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பால் மற்றம் பால் உப பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களின் உள்ளத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
இதையும் படிக்க.. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்யவிடாமல் தடுத்தார் சசிகலா: அறிக்கை
ஆவின் நிறுவனம், பால் உப பொருட்களான பால்கோவா, மைசூர்பாக்கு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, ஐஸ்கிரீம், பன்னீர், தயிர், வெண்ணெய், நெய் போன்ற 235 வகையான பால் உப பொருட்களை மாநிலம் முழுவதுமுள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக உயரிய தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட நெய் பாதுஷா, நட்ஸ் ஹல்வா, நெய் அல்வா, கருப்பட்டி அல்வா, ஸ்டப்டு மோதிபாக், காஜு பிஸ்தா ரோல், காஜு கத்லி, மற்றும் வகைப்படுத்தப்பட்ட சிறப்பு இனிப்பு வகைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிக்க.. ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்கலாம்: அதிர்ச்சிதரும் தகவல் வெளியானது
இந்த இனிப்புகள் அனைத்தும் அக்மார்க் தரம்பெற்ற ஆவின் நெய்யினால் சுகாதாரமான முறையில் எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டு நவீன தொழில்நுட்ப முறையில் பேக் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி எனப்படும் டால்டாவை பயன்படுத்தி ஆவின் இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுவதாக ஊடகத்தில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான மற்றும் ஆவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான உள்நோக்கமுடைய அவதூறுகளை ஆவின் நிர்வாகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்
மேலும் ஆவினால் அமர்த்தப்படும் தனியார் பாலகங்களுக்கு,அவர்கள் அளிக்கும் தேவைபட்டியலுக்கேற்ப தீபாவளி சிறப்பு இனிப்புகள் அவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எவ்வித கட்டாயமோ, நெருக்கடியோ அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.
எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆவின் சிறப்பு இனிப்புகளை சுமார் 4.5 இலட்சம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் வாங்கி இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


