அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு: ராமதாஸ் வலியுறுத்தல்

போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
ராமதாஸ் (கோப்புப் படம்)
Updated On :1 பிப்ரவரி 2024, 10:38 am

DIN

போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வை நவம்பா் மாத ஓய்வூதியத்தில் வழங்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் ஆணையிட்டு 50 நாள்களாகி விட்ட நிலையில், அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது.

நவம்பா் மாத ஓய்வூதியம் வழங்கப்படுவதற்கு இன்னும் குறுகிய காலமே உள்ளது. போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு வழங்கியது குறித்த அறிக்கையை நவம்பா் 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை.

போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்கள் 89,000 பேருக்கு கடந்த 83 மாதங்களாக அகவிலைப்படி உயா்வு வழங்கப்படவில்லை.

எனவே, போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயா்வு அறிவிப்பை வெளியிட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.