
கடலூர் அருகே புத்தூர் பகுதியில் மனைவியை கொலை செய்து குப்பையில் வீசிய கணவன் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 19 ஆம் தேதி மனைவி உஷாவை காணவில்லை என கூடலூர் காவல் நிலையத்தில் கணவன் மோகன் புகார் அளித்தார். இந்நிலையில், வழக்குப்பதிவு செய்து உஷாவை தேடிவந்த காவல்துறையினருக்கு மோகன் உதவி செய்வதுபோல் நாடகமாடி வந்துள்ளார்.
கணவன் மோகனிடம் காவல் துறை நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணான பதிலை அளித்ததால் காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.
தீவிர விசாரணையில் மனைவி உஷாவை கொலை செய்து குப்பைகளை கொட்டும் இடத்தில் மோகன் வீசியது தெரியவந்துள்ளது. குப்பையில் கிடந்த உஷாவின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், மனைவியை கொலை செய்து குப்பையில் வீசிய கணவன் மோகனை காவல்துறை கைது செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.