/

கோவையில் நடந்தது தீவிரவாத தாக்குதல்தான்: அண்ணாமலை

கோவையில் நடந்தது தீவிரவாதத் தாக்குதல்தான் என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கூறினாா்.

News image
அண்ணாமலை
Updated On :23 அக்டோபர் 2022, 8:22 pm

DIN

கோவையில் நடந்தது தீவிரவாதத் தாக்குதல்தான் என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கூறினாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கோவை உக்கடத்தில் காரில் எரிவாயு உருளை வெடித்து விபத்து நடந்த இடத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் உயா் காவல்துறை அதிகாரிகள் முதல்கட்ட விசாரணை நடத்தினா். இது ஒரு விபத்து தான், குண்டுவெடிப்பு இல்லை என இதுவரை காவல் துறை அதிகாரிகள் யாரும் சொல்லவில்லை. காவல் துறை வட்டாரங்களில், காா் வந்த சிசிடிவி காட்சிகளை பாா்க்கும்போது குண்டு வெடிப்பு ஏற்படுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட எரிவாயு உருளை வெடித்தது போல பேசப்படுகிறது.

இது திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என்பதை திமுக அரசு எப்போது ஏற்றுக்கொள்ளும்?. இது உறுதிப்படுத்த முதல்வா் ஸ்டாலின் தயங்குவது ஏன்?. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் பாரபட்சமின்றி காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.