தீபாவளிப் பண்டிகையையொட்டி பலர் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்ததால், சென்னையின் முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் கோயம்பேடு பிரதான சாலை, அண்ணாசாலை, பெரியார் சாலை உள்ளிட்டவை வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடின.
தீபாவளிப் பண்டிகை திங்கள்கிழமை நாளை (அக்.24) கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டிய விடுமுறை தினத்தால், சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்த பலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
தீபாவளிக்கு முந்தைய வார இறுதி விடுமுறையால் ( சனி, ஞாயிறுக் கிழமை) முன்கூட்டியே பலர் தங்களது ஊர்களுக்குப் புறப்பட்டனர்.
பேருந்துகள், ரயில்கள் மூலமாக இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால், சென்னையின் முக்கிய சாலைகள் வாகன நெரிசலின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. தியாகராய நகர், புரசைவாக்கம் போன்ற முக்கிய கடைவீதிகளில் மட்டும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. எனினும், சென்னையின் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மேம்பாட்டு திட்டத்துக்கு முதல்வா் ஜோசப் விஜய் ஒப்புதல்

நெல்லை உடனடியாக அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

பெட்ரோல் நிலையங்களில் மின்னேற்று அமைப்பு: நிறுவனங்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

செவிலியா் பணியிடங்கள் ரத்து அரசாணையை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



