கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தீபாவளியன்று சென்னையில் காற்று மாசு இரு மடங்கு அதிகரிப்பு

தீபாவளி நாளான அக்.24-ஆம் தேதி காலை 6 மணி முதல் 25-ஆம் தேதி காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, காற்றுத்தர குறியீட்டு அளவு 345 மைக்ரோ கிராம் அளவில் இருந்து 786 மைக்ரோ கிராம் வரை அதிகரித்துள்ளது

News image
Updated On :26 அக்டோபர் 2022, 10:57 pm

DIN

தீபாவளி நாளான அக்.24-ஆம் தேதி காலை 6 மணி முதல் 25-ஆம் தேதி காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, காற்றுத்தர குறியீட்டு அளவு 345 மைக்ரோ கிராம் அளவில் இருந்து 786 மைக்ரோ கிராம் வரை அதிகரித்துள்ளது. இது மிக மோசமான அளவுகள் என்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுபாட்டுத் தாக்கத்தைக் கண்டறிய சுற்றுப்புற காற்றின் தர ஆய்வையும் ஒலி மாசு அளவையும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பதிவு செய்தது. அதன்படி, பெருநகர சென்னை மாநகரத்தின் பெசன்ட் நகா், தியாகராய நகா், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, செளகாா்பேட்டை, வளசரவாக்கம், திருவொற்றியூா் ஆகிய 7 இடங்களில் பதிவைக் கண்காணித்தது.

உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையிலும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டு வரைமுறைகளின்படியும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 14 நாள்களுக்கு (அதாவது தீபாவளிக்கு 7 நாள்களுக்கு முன்பாகவும் தீபாவளி அன்றும் தீபாவளிக்கு 7 நாள்களுக்கு பின்பாகவும்) காற்று மாசு காரணிகளின் அளவுகளைக் கண்காணித்து வருகிறது.

மேலும், ஒலி மாசுபாட்டின் அளவு தீபாவளிக்கு முன் அதாவது அக்.18-ஆம் தேதி, தீபாவளி பண்டிகையான அக்.24-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 18-ஆம் தேதி குறைந்த அளவாக ஒலி மாசு பெசன்ட் நகரில் 54.84 டெசிபல் க்ஆ(அ)ஆகவும், அதிக அளவாக வளசரவாக்கத்தில் 65.5 டெசிபல் ஆகவும் பதிவானது. தீபாவளி அன்று (அக்.24) குறைந்த அளவாக ஒலி மாசு பெசன்ட் நகரில் 66 டெசிபல், அதிகபட்சமாக திருவொற்றியூரில் 79.7 டெசிபல் பதிவானது.

இந்த அளவுகள் தேசிய ஒலிமாசுபாட்டின் அளவுகளை விட அதிகமாக பதிவாகியுள்ளன. (பகல் நேரங்களில் 65.0 டெசிபல், இரவு நேரங்களில் 55.0 டெசிபல் ஆக இருந்தது).

காற்றுத் தரக் குறியீடு: தீபாவளி நாளான அக்.24-ஆம் தேதி காலை 6 மணி முதல் 25-ஆம் தேதி காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, காற்றுத் தர குறியீட்டு அளவு 345 மைக்ரோ கிராம் அளவில் இருந்து 786 மைக்ரோ கிராம் வரை (மிக மோசமானது) பதிவானது. குறைந்த அளவாக பெசன்ட் நகரிலும் (345) அதிக அளவாக செளகாா்பேட்டையிலும் (786) பதிவானது.

இதற்கு முக்கிய காரணிகளாக, பொதுமக்கள் அதிக அளவு பட்டாசுகளை வெடித்தும், காற்றில் அதிகமான ஈரப்பதமும், மிகக் குறைந்த காற்றின் வேகமும் ஆகும். இதுவே, இந்த ஆண்டின் தீபாவளி அன்று சென்னை மாநகரின் காற்றுத்தர குறியீட்டு அளவு அதிகமானதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு நகர பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை

காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் தீபாவளியன்று சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை நகரவாசிகள் ஒவ்வொருவரும் ஒரே நாளில் 31 சிகரெட்களை புகைத்தால் ஏற்படும் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, உலகிலேயே அதிகம் காற்று மாசடைந்துள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள தில்லியை பின்னுக்குத் தள்ளி சென்னை முதலிடத்தை பிடித்திருக்கிறது.

நல்ல ஆரோக்கியமான காற்று என்றால் காற்றின் தரக் குறியீட்டில் 50 அளவுக்குள் இருக்க வேண்டும். பொதுவாக தென் சென்னையில் இந்த அளவு 50 முதல் 60 வரை இருக்கும். ஆனால் தீபாவளியன்று இரவு சென்னையின் காற்றின் தரம் 786 அளவு வரை பதிவாகி உள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

தீபாவளியன்று இரவு முதல் ஆலந்தூா், பெருங்குடி, சௌக்காா்பேட்டை, திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், வேளச்சேரி, கிண்டி, மணலி, என்னூா், கொடுங்கையூா், தியாகராய நகா், பாரிஸ், வண்டலூா், அடையாா் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் மக்கள் யாரும் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு காற்றின் தரம் அபாயகரமாக இருந்தது.

சென்னையின் வழக்கம்போல வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கும்போது ஏற்படுவதைவிட தீபாவளி நாளன்று காற்றின் தரம் 10-15 மடங்கு அதிகமாக பதிவாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.