சென்னை விமான நிலையத்தில் ரூ.59.70 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.59.70 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


சென்னை விமான நிலையத்தில் ரூ.59.70 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்கத்துறையினருக்கு கிடைத்த உளவுத்தகவலின் படி, கடந்த 22ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி மற்றும் ஆலந்தூரைச் சேர்ந்த 2 ஆண் பயணிகளிடம் சோதனை நடத்திய போது ரூ.59.70 லட்சம் மதிப்புள்ள 1.281 கிலோகிராம் தங்கம், ரூ.4.86 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தங்கத்தை இவர்கள் பசை வடிவில் ஆசனவாயில் மறைத்து கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மற்றொரு சோதனையின் போது, இலங்கையைச் சேர்ந்த ஒரு பயணியிடமிருந்து ரூ.23.13 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த கற்கள் கைப்பற்றப்பட்டது. இவற்றை சுங்கத்துறையினர் கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...