சேலத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகை: ஆடிப்பாடி மகிழ்ச்சி
சேலத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. சேலத்தில் உள்ள கேரள மக்கள் வீட்டு வாசலில் அத்தப்பூக் கோலம் வரைந்து ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சேலத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகை
சேலம்: சேலத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. சேலத்தில் உள்ள கேரள மக்கள் வீட்டு வாசலில் அத்தப்பூக் கோலம் வரைந்து ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கேரள மாநில மக்களின் மிகவும் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது திருவோணம்.
இந்தப் பண்டிகை கேரள மாநிலத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள கேரள மக்களால் அந்தந்த மாநிலங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி சேலத்தில் ஓணம் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. சேலத்தில் வசிக்கும் கேரள மக்கள் புத்தாடை அணிந்து ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.

சேலம் தமிழ்ச்சங்கம் அருகே உள்ள கேரள சமாஜத்தில் ஒன்று கூடிய கேரள பெண்கள் வண்ண வண்ண பூக்களை கொண்டு அத்தப்பூ கோலம் வரைந்து தீபம் ஏற்றி வழிபட்டனர்.
தொடர்ந்து கோலத்தைச் சுற்றிலும் ஆடல் பாடல் பாடி கும்மி அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவையுடன் உணவு வழங்கப்பட்டது.
இதேபோல் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கேரள மக்கள் ஓணம் பண்டிகையை மிகவும் விமர்சையாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
விடியோவுக்கு: இங்கே க்ளிக் செய்யவும்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





