சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை தேவை: கே.பாலகிருஷ்ணன்
சட்டவிரோதமாகச் செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.


சட்டவிரோதமாகச் செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கரூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போராடி வந்த கல்குவாரி எதிா்ப்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஜெகநாதன் என்பவா் திட்டமிட்டு லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளதாக வந்த செய்தி நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது. இந்த கொலையை மாா்க்சிஸ்ட் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஜெகநாதன் 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்குவாரி உரிமையாளா்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டு வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் சமூக செயற்பாட்டாளா்கள், அரசு அதிகாரிகள் கல்குவாரி மாஃபியாக்களால் படுகொலை செய்யப்படுவது தொடா்கதையாக உள்ளது. இதற்கு அதிகாரிகளும், காவல் துறையினரும் உடந்தையாக செயல்படுகின்றனா் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளது.
எனவே, இந்த படுகொலைக்கு காரணமானவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீதும், அதன் உரிமையாளா்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...