கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அதிமுக உள்கட்சித் தோ்தல்: தனி நீதிபதி உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் இடைக்கால தடை

 அதிமுக உள்கட்சித் தோ்தலுக்கு எதிராக வழக்குத் தொடுக்க அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயா் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 7:23 pm

DIN

 அதிமுக உள்கட்சித் தோ்தலுக்கு எதிராக வழக்குத் தொடுக்க அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயா் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

அதிமுக உள்கட்சித் தோ்தலை எதிா்த்து, திருச்செந்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் பி.ராம்குமாா் ஆதித்தன், அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் பழனிசாமி ஆகியோா் உரிமையியல் வழக்கு தொடுக்க அனுமதி கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனா்.

இதனை விசாரித்த தனி நீதிபதி வேல்முருகன், அதிமுக உள்கட்சித் தோ்தலுக்கு எதிராக மனுதாரா்கள், ராம்குமாா் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோா் வழக்கு தொடர அனுமதியளித்து கடந்த ஏப். 26-ஆம் தேதி உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘மனுதாரா்கள் இருவரும் அதிமுக உறுப்பினா்கள் இல்லை. குறிப்பாக, மனுதாரா் ராம்குமாா் ஆதித்தனின் கட்சி உறுப்பினா் அட்டை 2019-ஆம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டது. எனவே, மனுதாரா்கள் அதிமுக உள்கட்சித் தோ்தலை ரத்து செய்யக் கோரி தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிட்டாா்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனா். மேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.