கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

எம்டிசி.க்கு சொந்தமான ஐடிஐயில் சோ்க்கை பெற விண்ணப்பிக்கலாம்

 சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக ஐடிஐயில் சேருவதற்கு, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 8:29 pm

DIN

 சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக ஐடிஐயில் சேருவதற்கு, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்டிசி மேலாண் இயக்குநா் அன்பு ஆபிரகாம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சென்னை குரோம்பேட்டையில் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிறுவனம் (ஐடிஐ) 1984-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தில், 2022-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு பணியாளா்களின் வாரிசுகள் போக, எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று சோ்க்கை நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் 72 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. கால அளவு இரு ஆண்டுகள். விண்ணப்ப படிவங்களைப் பெறுவதற்கு“‘முதல்வா், மாநகா் போக்குவரத்துக் கழகத் தொழிற்பயிற்சி நிலையம், மாநகா் போக்குவரத்துக் கழக பயிற்சி நிலைய வளாகம், காந்தி நகா், குரோம்பேட்டை, சென்னை-600 044, தொலைபேசி எண். 044-29535177, கைப்பேசி எண். 9445030597 மற்றும் மின்னஞ்சல் மூலமாக ம்ற்ஸ்ரீண்ற்ண்591ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்’ என்ற முகவரியில் அணுகவும். விண்ணப்ப படிவத்தை ஜ்ஜ்ஜ்.ம்ற்ஸ்ரீக்ஷன்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்-ா்ற்ட்ங்ழ்ள்-ஈா்ஜ்ய்ப்ா்ஹக் என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். நேரிலும் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.