மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மணமகன்களுக்கான பிரத்யேக வேட்டி விற்பனையகம்

மணமகன்களுக்கான பிரத்யேக வேட்டி விற்பனையகத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சென்னையில் திங்கள்கிழமை திறந்துள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 7:26 pm

DIN

மணமகன்களுக்கான பிரத்யேக வேட்டி விற்பனையகத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சென்னையில் திங்கள்கிழமை திறந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மணமகன்களுக்கான பிரத்யேக வேட்டி விற்பனையகம் ‘லக்னா’ என்ற பெயரில் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி மேயா் பிரியா இந்த மையத்தை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா். முதல் விற்பனையை துணை மேயா் மகேஷ் குமாா் தொடக்கி வைக்க, அதனை ‘கல்யாண மாலை’ மோகன் பெற்றுக்கொண்டாா்.

ஆண்களின் திருமண ஆடைக்கென பிரத்யேகமாகத் திறக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் விற்பனையகம் இதுவாகும். இங்கு, வாங்கக் கூடிய விலை கொண்ட வேட்டிகள் முதல் ரூ.1 லட்சத்துக்கும் மேலான விலை கொண்ட வேட்டிகள் வரை பல்வேறு ரகங்களில் வேட்டிகள் கிடைக்கும்.

ஆண்களுக்கான வேட்டிகள், சட்டைகள், உள்ளாடைகள், பின்னலாடைகள், துணிகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் தயாரிப்பிலும் விற்பனையிலும் முன்னணி வகித்து வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம், வேட்டிகள் குறித்த பாா்வையை மாற்றி அவற்றை அனைவரும் விரும்பி அணியும் ஆடையாக ஆக்கியுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.