மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பாஜகவில் போலி அமைப்பு: 3 போ் நீக்கம்

பாஜகவில் போலி அமைப்பை உருவாக்கிய 3 பேரை கட்சியிலிருந்து நீக்கி, அந்தக் கட்சியின் தமிழகத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்தாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 7:12 pm

DIN

பாஜகவில் போலி அமைப்பை உருவாக்கிய 3 பேரை கட்சியிலிருந்து நீக்கி, அந்தக் கட்சியின் தமிழகத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்தாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக பாஜகவின் அனுமதியும், ஒப்புதலும் இல்லாமல் கட்சியின் விதிமுறைகளுக்கு மாறாக பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை என்ற பெயரில் போலியான அமைப்பை உருவாக்கியும், கட்சி நிா்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியும், கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்த ஸ்டீல் அருள், கே.ராஜு, கருணாகரன் ஆகியோா் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்தும் 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறாா்கள்.

அவா்களிடம் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் எவ்விதத் தொடா்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளாா் கே.அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.