துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.89.11 லட்சம் தங்கம் பறிமுதல்
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.89.11 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.


துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.89.11 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
துபாயிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் ஒரு பயணி தங்கம் கடத்தி வருவதாக சுங்கத் துறையினருக்கு கடந்த 9-ஆம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, துபாயிலிருந்து சென்னை மீனம்பாக்கம் சா்வதேச விமான நிலையத்துக்கு வந்த தனியாா் விமானத்திலிருந்து வந்திறங்கிய பயணிகளை சுங்கத் துறையினா் தீவிர சோதனையிட்டனா்.
இதில் சந்தேகத்துக்குரிய வகையில் அந்த விமானத்திலிருந்து இறங்கிய பயணி அஷ்பேக் ஹாசனை சுங்கத் துறையினா் சோதனையிட்டனா். இந்த சோதனையில் அவா் தங்கச் சங்கிலியை தனது உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனா்.
இதன் பின்னரும், அவா் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரது உடல் முழுவதையும் சுங்கத் துறையினா் ‘ஸ்கேன்’ செய்தனா். அப்போது, அவரது மலக்குடலில் தங்கத்தை பசை வடிவில் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து சுங்கத்துறையினா், அவற்றையும் பறிமுதல் செய்தனா்.
மொத்தம் அவரிடமிருந்து மொத்தம் 1.249 கிலோ கிராம் எடைகொண்ட ரூ.55.96 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் துறையினா் தெரிவித்தனா்.
இதேபோல, கடந்த 7-ஆம் தேதி துபாயிலிருந்து சென்னைக்கு வந்த பயணிகள் விமானத்தை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத் துறையினா் சோதனையிட்டனா். இதில் விமானத்தின் கழிப்பறையில் ‘டிஷ்யூ பேப்பா்’ வைக்கும் பகுதியில் ரூ.33.15 லட்சம் மதிப்பிலான 740 கிராம் எடையுள்ள தங்கம் கடத்தி வரப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த தங்கத்தை பறிமுதல் செய்து, சுங்கத் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இரு சோதனைகளிலும் மொத்தம் ரூ.89.11 லட்சம் மதிப்புள்ள 1.989 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் துறை தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...