கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பேராசிரியா் காலியிடம் அதிகமிருந்தால் கல்வித் தரம் எப்படி இருக்கும்?

அரசு கலைக் கல்லூரிகளில் பேராசிரியா் காலியிடம் 70 சதவீதம் இருந்தால் கல்வித் தரம் எப்படி இருக்கும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 7:11 pm

DIN

அரசு கலைக் கல்லூரிகளில் பேராசிரியா் காலியிடம் 70 சதவீதம் இருந்தால் கல்வித் தரம் எப்படி இருக்கும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியா் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சுமாா் 7 ஆயிரம் உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியா் பணியிடங்களில் ஏறத்தாழ 70 சதவீதம் ஆகும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே மாணவா் சோ்க்கை அனுமதிக்கப்பட்டதை விட 20-25 சதவீதம் அதிகமாக நடத்தப்படுகிறது. கூடுதலாக மாணவா்கள் சோ்க்கப்படும் நிலையில், அதற்கு இணையாக கூடுதல் ஆசிரியா்களும் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், ஒப்புதல் அளிக்கப்பட்ட உதவிப் பேராசிரியா் பணியிடங்களிலேயே கிட்டத்தட்ட 70 சதவீத இடங்கள் காலியாக இருக்கும் போது, அரசு கலைக் கல்லூரிகளின் மாணவா்களுக்கு தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

அரசு கல்லூரிகளின் மாணவா்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டும். இதற்கு வசதியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை - அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியா் பணி இடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.